» சினிமா » செய்திகள்
பகாசூரன் அனைவரும் பார்க்க வேண்டிய படம் - அன்புமணி பாராட்டு
சனி 18, பிப்ரவரி 2023 5:39:21 PM (IST)
‘பகாசூரன்’ படம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்” என அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவான ‘பகாசூரன்’ படம் நேற்று (பிப்.17) திரையரங்குகளில் வெளியானது. சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் ‘பகாசூரன்’ சமூக அக்கறை கொண்ட படம் என குறிப்பிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் படக்குழுவையும் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வூட்டும் ‘பகாசூரன்’ திரைப்படத்தின் இயக்குநர் மோகன்.ஜி, நடிகர் செல்வராகவன் மற்றும் படக்குழுவினருக்கு எனக்கு வாழ்த்துகள். சமூக அக்கறை கொண்ட '#பகாசூரன்' அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்” என பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

21 ஆண்டுகள் கழித்து எனது கனவு நனவானது: ரஜினியை சந்தித்த சஞ்சு சாம்சன்!
திங்கள் 13, மார்ச் 2023 4:20:53 PM (IST)

லியோ படப்பிடிப்பில் இணைந்தார் சஞ்சய் தத்!
சனி 11, மார்ச் 2023 5:13:41 PM (IST)

கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார் தேசிங்கு பெரியசாமி!
வெள்ளி 10, மார்ச் 2023 11:46:38 AM (IST)

வெற்றிமாறன் சிறந்த இயக்குநர்: இளையராஜா புகழாரம்!
வியாழன் 9, மார்ச் 2023 3:13:29 PM (IST)

ஜெயிலர் பட இயக்குநருக்கு பரிசளித்த ஜாக்கி ஷெராஃப்
புதன் 8, மார்ச் 2023 4:16:18 PM (IST)

ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170-வது படம் : லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு
வியாழன் 2, மார்ச் 2023 11:08:37 AM (IST)
