» சினிமா » செய்திகள்

சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு நிறைவு

வெள்ளி 21, அக்டோபர் 2022 5:26:41 PM (IST)



சிம்பு - கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் 'பத்து தல' படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது..

'சில்லுன்னு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' உள்ளிட்ட படங்களை இயக்கி ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'பத்து தல'. பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், மலையாள நடிகை அனு சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி, கலையரசன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி என பலரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த 'பத்துதல' படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்திரை அணையில் நடந்தபோது படப்பிடிப்புக்கு நடுவே ரசிகர்களுடன் சிம்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் இயக்குநர் கிருஷ்ணா மற்றும் சிம்பு ஆற்றின் கரையில் பேசுவது போல இருக்கும் புகைப்படமும், கௌதம் கார்த்திக் மற்றும் சிம்பு இயக்குநர் கிருஷ்ணாவுடன் சேர்ந்து நடந்து வரும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. ’பத்துதல’ திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory