» சினிமா » செய்திகள்

சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு வெளியீடு

சனி 3, செப்டம்பர் 2022 10:38:58 AM (IST)

கெளதம் கௌதம் வாசுதேவ மேனன், இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா என இரண்டு வெற்றிகளுக்கு பிறகு 3வது முறையாக இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்திருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே. கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சித்தார்த்தா நுனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார். முன்னதாக, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் ‘டப்பிங்’ பணிகள் முடிவடைந்திருந்ததைத் தொடர்ந்து  அப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது மீதமுள்ள 2 பாடல்களும் டிரைலரும் வெளியாகியுள்ளது.

ஏழ்மையின் காரணமாக மும்பைக்குப் பிழைக்கப் போகும் முத்து(சிம்பு) எதிர்கொள்ளும் பிரச்னைகளும் சவால்களுமாக இப்படம் உருவாகியுள்ள  ’வெந்து தணிந்தது காடு’ வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory