» சினிமா » செய்திகள்

காதலியை மணந்தார் காமெடி நடிகர் புகழ்!!

வெள்ளி 2, செப்டம்பர் 2022 12:28:52 PM (IST)குக் வித் கோமாளி மூலம் பிரபலமான காமெடி நடிகர் புகழ், தனது காதலியான பென்சியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். 

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த புகழ், சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’, அஜித் குமாருடன் ‘வலிமை’, சந்தானத்துடன் ‘சபாபதி’ மற்றும் ‘என்ன சொல்ல போகிறாய்’, ‘யானை’ உள்பட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். தற்போது ‘மிஸ்டர் சூ கீப்பர்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். 

இந்நிலையில், கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த பென்சியா என்பவரை புகழ் திருமணம் செய்துகொண்டார். திண்டிவனம் அருகிலுள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் நேற்று காலை அவர்கள் திருமணம் நடந்தது.  சசிகுமார், சமுத்திரக்கனி மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். புகழ், பென்சியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி, வரும் 5ம் தேதி மாமல்லபுரம் ரிசார்ட்டில் நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory