» சினிமா » செய்திகள்

நடிகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் : தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

வெள்ளி 2, செப்டம்பர் 2022 12:04:39 PM (IST)

தெலுங்கு திரையுலகில் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சில அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதாக தெரிகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன், படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 3 வாரங்களில் ஓடிடியில் வெளியாவதால் படத்தின் வசூல் பாதிப்பதாக கூறி தெலுங்கு திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவகை்கப்பட்டது. அப்பொழுது சில முக்கிய முடிவுகளை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ளது. இதுகுறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. 

அதில், இனிமேல் நடிகர்களுக்கும்  தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நாள் சம்பளம் கிடையாது.நடிகர்களின் ஊதியத்தில் அவர்களுக்கான பணியாளர்கள், பயண செலவு, தங்குமிடம், சிறப்பு உணவுகள் ஆகியவை அடங்கும். மேற்சொன்னவைகளுக்காக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூடுதலாக செலவு செய்யமுடியாது. தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இது பொருந்தும். நடிகர்களுடனான ஒப்பந்தத்தில் ஊதிய விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். 

நடிகர்கள் ஒப்பந்த படி சரியான நேரத்தில் படப்பிடப்பில் கலந்துகொள்ள வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு தினசரி தகவல் தரவேண்டும். படங்கள் திரையரங்குகளில் வெளியாகும்போது ஓடிடி குறித்த விவரங்கள் இடம்பெறாது. படங்கள் திரையரங்குகளில் வெளியாகி குறைந்தபட்சம் 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாகவேண்டும் போன்ற முடிவுகளை தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது. மேற்சொன்ன அனைத்தும் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் நடைமுறைக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory