» சினிமா » செய்திகள்

இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது துவங்கும்? புதிய தகவல்

வியாழன் 28, ஜூலை 2022 11:19:31 AM (IST)

இந்தியன் 2 ஷூட்டிங் செப்டம்பர் மாதம் முதல் துவங்க உள்ள நிலையில், மேக்கப் பணிகளுக்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளார். 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நிற்கிறது. படப்பிடிப்பு மீண்டும் துவங்குமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. காரணம் படத்தில் நடித்துவந்த உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். கமல்ஹாசன் - விவேக் இணைந்து நடிக்கும் முதல் படமாக இந்தியன் 2 திரைப்படம் கூறப்பட்டது. காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்துவிட்டது. இனி அவர் நடிப்பாரா என்பது சந்தேகமே. 

இந்த நிலையில் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி காரணமாக இந்தியன் 2 திரைப்படத்தை மீண்டும் துவங்க முயற்சிகள் நடந்துவருகின்றன. உதயநிதி ஸ்டாலின் கூட விக்ரம் பட வெற்றி விழாவில் விரைவில் இந்தியன் 2 பணிகள் துவங்கும் என தெரிவித்திருந்தார்.  இதன் ஒரு பகுதியாக இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் வருகிற செப்டம்பர் மாதம் முதல் துவங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மேக்கப் பணிகளுக்காக நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா செல்லவிருக்கிறாராம். 

இயக்குநர் ஷங்கர் தற்போது ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. முதன்முறையாக ஷங்கர் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு இந்தியன் 2 படத்தை ஷங்கர் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory