» சினிமா » செய்திகள்

கள்ளக்காதல் விவகாரம்: தேசிய விருது நடிகைக்கு நேர்ந்த அவமானம்!!

புதன் 27, ஜூலை 2022 11:45:37 AM (IST)



தனது கனவ்ருடன் கள்ளத்தொடர்பு வைத்து இருப்பதாகக்கூறி தேசிய விருது பெற்ற நடிகையை நடிகரின் மனைவி நடு ரோட்டில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல ஒடிசா நடிகை பிரக்ருதி மிஸ்ரா கடந்த ஆண்டு அவர் தேசிய விருது வாங்கி இருந்தார்.. அண்மையில் இவர் பிரேமம் என்ற ஒடிசா படத்தில் நடிகர் பாபுஷான் மொகந்தியுடன் இணைந்து நடித்து இருந்தார். இந்த நிலையில் இவரும், நடிகர் மொகந்தியும் காரில் புவனேஷ்வர் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்தக்காரை வழிமறித்த மொகந்தியின் மனைவி திருப்தி , அவர்கள் தவறான உறவு வைத்துள்ளார்கள் என்று கருதி அடித்து உதைத்தார். அத்தோடு காரில் இருந்த நடிகை மிஸ்ராவின் தலைமுடியை பிடித்து இழுத்தார். இதில் திக்குமுக்காடி போன மிஸ்ரா அங்கிருந்து ஓடினார். இருந்தாலும் அவரை விடாத திருப்தி நடுரோட்டில் அவரை விரட்டி, விரட்டி அடித்தார். ஒரு வழியாக தப்பிய மிஸ்ரா, அங்கிருந்த ஆட்டோவில் ஏறி ஓடினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்த விவகாரம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் மிஸ்ரா, "பெண்கள் முன்னேற்றத்திற்காக வேலை செய்யும் போது, களத்தில் எங்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுகிறது. அவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. இதை மாற்றுவதற்கான பெரிய இலக்கை நோக்கி நான் சென்று கொண்டிருக்கிறேன். இதை சார்ந்து வேலை செய்பவர்கள் இன்னும் அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நான் இன்னும் என்னுடைய வேலையை முழுமையாக முடிக்கவில்லை.

இறுதியாக 'பெண்கள் முன்னேற்றம்' என்ற அந்த இலக்கை அடைய நாம் இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டி இருக்கிறது" என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் திருப்தி நடந்து கொண்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக மிஸ்ராவின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல திருப்தியும் தங்களது வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மிஸ்ரா நுழைவதாக கூறி புகார் அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory