» சினிமா » செய்திகள்

சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கை படமாக்கும் ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல்!

செவ்வாய் 26, ஜூலை 2022 11:30:16 AM (IST)சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக கொண்ட புதிய படம் ஒன்றை ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்குகிறார்.

நடிகர் சூர்யா நடிப்பில் உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் ஜெய் பீம். இந்தப் படத்தை டி.ஜே. ஞானவேல் இயக்கியிருந்தார். நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரசிகர்கள் மட்டுமல்லாது, திரைத் துறையைச் சேர்ந்த பலரும் படத்துக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் அடுத்து மீண்டும் ஓர் உண்மைக் கதையை மையமாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். மறைந்த சரவண பவன் ராஜகோபால் - ஜீவ ஜோதி வழக்கை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ள இப்படத்தை ஜங்லி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தோசா கிங் என்ற பெயரில் இந்தியில் உருவாகும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக ஞானவேல், நான் பத்திரிகையாளராக இருந்த நாட்களில் இந்த வழக்கைப் பின்பற்றி இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனித்தேன். திரையில் ஜீவஜோதியின் சட்டப் போராட்டம் மூலம் புதிய பரிமாணங்களை வெளிக் கொண்டு வருவேன் என நம்புகிறேன். சமகால இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான சில படங்களை உருவாக்குவதற்கு பெயர் பெற்ற ஜங்கிலி பிக்சர்ஸுடன் இந்தப் பயணத்தைத் தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பணியாளரான ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால், வாழ்வில் மேலும் பல உயரத்தை அடையாலாம் என ஜோதிடர் ஒருவர் கூறியதால் ராஜகோபால் 3-வது முறையாக ஜீவஜோதியை திருமணம் செய்துகொண்டார். இதற்காக ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை, ராஜகோபால் கடத்தி, கொலை செய்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சரவண பவன் உணவகங்களின் நிறுவனர் பி ராஜகோபால் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை18-ம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory