» சினிமா » செய்திகள்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுடன் இளையராஜா சந்திப்பு

செவ்வாய் 26, ஜூலை 2022 10:49:02 AM (IST)டெல்லியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை இளையராஜா சந்தித்தார்.

விளையாட்டு, சமூக சேவை ,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார்.

மேலும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷா,ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா பதவியேற்றுக் கொண்டார். நேற்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இளையராஜா தமிழில் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்ற பிறகு பிறகு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் இளையராஜா சந்தித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory