» சினிமா » செய்திகள்

68-வது தேசிய விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகராக சூர்யா தேர்வு

வெள்ளி 22, ஜூலை 2022 5:15:59 PM (IST)

2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  சிறந்த நடிகராக சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகர் விருது 2 நடிகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சூரரைப் போற்று படத்துக்காக சூர்யாவுக்கும், 'தி அன்சங் வாரியர்' படத்துக்காக அஜய் தேவ்கன்னுக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகை விருது ’சூரரைப்போற்று’ படத்துக்காக அபர்ணா பாலமுரளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறந்த உறுதுணை நடிகர் (பெண்): சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்துக்காக லக்ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது 'சிவரஞ்சனியும் சில பெண்களும்' படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வசந்த் இயக்கியிருந்தார். சிறந்த மலையாளப் படமாக 'திங்கலஞ்ச நிச்சயம்' (Thinkalazhcha Nishchayam) படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் 'சூரரைப்போற்று' படத்தின் சிறந்த பிண்ணனி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'சிவரஞ்சினியும் சில பெண்களும்' படத்துக்காக எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத்துக்கு தேசிய விருது அறிவிப்பு. ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதாகொங்காரா இருவருக்கும் 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் சிறந்த திரைக்கதைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

'மண்டேலா' படத்தின் சிறந்த திரைக்கதை வசன எழுத்தாளர் விருது மடோனே அஸ்வினுக்கு  சிறந்த திரைக்கதை வசன எழுத்தாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது  மண்டேலா படத்துக்காக அதன் இயக்குநர் மடோனாஸ் அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யப்பனும் கோஷியும்' படத்துக்காக ராஜசேகர், மாஃபியா சசி மற்றும் சுப்ரீம் சுந்தர் ஆகியோருக்கு பெஸ்ட் ஸ்டண்ட் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் வெளியான 'ஆலா வைகுந்தபுரமுலோ' படத்தின் இசையமைப்புக்காக இசையமைப்பாளர் தமன் சிறந்த இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 'அய்யப்பனும் கோஷியும்' படத்துக்காக நஞ்சம்மாவுக்கு சிறந்த பெண் பின்னணி பாடகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆண் பின்னணி பாடகர் விருது ராகுல் தேஷ் பாண்டே 'மீ வசந்தராவ்' மராத்தி படத்துக்கு அறிவிக்கப்பட்டது. அய்யப்பனும் கோஷியும் படத்துக்காக பிஜூ மேனனுக்கு சிறந்த உறுதுணை நடிகர் விருதும், இந்த படத்தை இயக்கிய கே.ஆர்.சச்சிதானந்தனுக்கு (மறைவு) சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory