» சினிமா » செய்திகள்

அமெரிக்காவில் பில் கேட்ஸை சந்தித்த மகேஷ் பாபு!

வியாழன் 30, ஜூன் 2022 4:50:46 PM (IST)நடிகர் மகேஷ் பாபு அமெரிக்காவில் பில்கேட்ஸை சந்தித்த அனுபவம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. இவர் நடித்த சில படங்கள் தமிழில் விஜய் நடித்த கில்லி மற்றும் போக்கிரி படங்களாக ரீமேக் செய்யப்பட்டன. மேலும் சில ஆண்டுகள் முன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இவர் ஸ்பைடர் என்ற திரைப்படத்தில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகிய சர்காரு வாரிபாட்டா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கீர்த்தி சுரேஷ் இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் மனைவியுடன் அமெரிக்கா பறந்திருக்கும் மகேஷ் பாபு நேற்று உலகப் பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனருமான பில்கேட்ஸை சந்தித்துள்ளார். இந்தப் புகைப்படத்தை வலைதளங்களில் பகிர்ந்துள்ள மகேஷ் பாபு, "பில்கேட்ஸை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது மகிழ்ச்சி. உலகம் இதுவரை பார்த்த மிகச்சிறந்த தொலைநோக்கு சிந்தனையாளர்களில் ஒருவர் அவர். எனினும், மிகவும் எளிமையான மனிதரும்கூட. உண்மையில் மிகச்சிறந்த உத்வேகம்” என வியந்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory