» சினிமா » செய்திகள்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணம்!!
புதன் 29, ஜூன் 2022 8:30:33 AM (IST)
பிரபல தமிழ் திரைப்பட நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 48.

தொற்றில் இருந்து மீண்டு வந்தாலும் பிந்தைய மருத்துவ பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட வித்யாசாகர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நுரையீரலில் ஏற்பட்ட தொற்றுக்கு அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
நடிகை மீனாவின் கணவர் மரணம் திரைத்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா நட்சத்திரங்கள் பலரும் மீனாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். வித்யாசாகரின் உடல் இன்று கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரசிகர்கள் ரசனை மாறிவிட்டது: பாலிவுட் படங்கள் தோல்வி குறித்து மாதவன் விளக்கம்
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 4:20:31 PM (IST)

இணைந்தே பல சாதனைகள் செய்வோம் ! - ஷங்கருக்கு கமல்ஹாசன் வாழ்த்து
புதன் 17, ஆகஸ்ட் 2022 5:01:08 PM (IST)

பொன்னியின் செல்வன் டிரைலரை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்!
புதன் 17, ஆகஸ்ட் 2022 3:42:02 PM (IST)

திரையுலகில் 47 ஆண்டுகள்: எளிமையாக கொண்டாடிய ரஜினி குடும்பத்தார்!
புதன் 17, ஆகஸ்ட் 2022 12:45:25 PM (IST)

சொகுசு கார் விவகாரம்: நடிகர் விஜய் மீதான வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!
புதன் 17, ஆகஸ்ட் 2022 12:30:59 PM (IST)

வீடுகளில் அனைவரும் தேசியக் கொடியை ஏற்றுவோம்” - ரஜினி வேண்டுகோள்
சனி 13, ஆகஸ்ட் 2022 3:22:00 PM (IST)
