» சினிமா » செய்திகள்

இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு கோல்டன் விசா : ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியது!

புதன் 15, ஜூன் 2022 11:14:08 AM (IST)



ஐக்கிய அரபு அமீரகம் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.

மாநாடு, மன்மத லீலை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. கோல்டன் விசா பெற்றதை வெங்கட் பிரபு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

மேலும், தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலருக்கும் இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர். கோல்டன் விசா ஐக்கிய அமீரகத்தின் குடியுரிமை போன்றது. இந்த விசாவை வைத்திருப்பவர்கள் பத்து வருடங்களுக்கு அந்நாட்டின் குடிமகன்களாக கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory