» சினிமா » செய்திகள்

நிலம் வாங்கி தருவதாக சூரியிடம் பண மோசடி : நடிகர் விஷ்ணு விஷாலிடம் விசாரணை

சனி 11, ஜூன் 2022 5:43:51 PM (IST)

நடிகர் சூரி அளித்துள்ள நிலமோசடி புகார் தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தையிடம் விசாரணை நடைபெற்றது. 

நகைச்சுவை நடிகர் சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக பண மோசடி செய்யப்பட்ட வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. ரமேஷ் கொடவாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நடிகர் சூரி இந்த வழக்கு தொடர்பாக 3 முறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் கொடவாலா ஆகியோருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினார்கள். அதை ஏற்று நடிகர் விஷ்ணுவிஷால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள். அவரது தந்தை ரமேஷ்கொடவாலாவிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory