» சினிமா » செய்திகள்

மாமல்லபுரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து!

வியாழன் 9, ஜூன் 2022 11:42:22 AM (IST)



மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. 

நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது. இயக்குநர் விக்‌ஷேன் சிவன் லால்குடியைச் சேர்ந்தவர். நயன்தாரா கேரளாவைச் சேர்ந்தவர்.

இந்நிலையில் நயன்தாரா - விக்‌ஷேன் சிவன் ஆகிய இருவரின் காதல் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக் கான், விஜய் சேதுபதி, சரத்குமார் மற்றும் இயக்குநர்கள் மணி ரத்னம், அட்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். 

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.


மக்கள் கருத்து

திரை உலகத்தினர் ஆ ?Jun 10, 2022 - 09:31:19 AM | Posted IP 162.1*****

திரையுலக பிரபலங்கள் டாம் குருஸ், அர்னால்டு, ஜாக்கி சான், ஜானி டெப், ஏஞ்சலினா ஜூலி, ஸ்பைடர் மேன் நடிகர்,.... உலகத்துல எல்லா நடிகர்கள் விமானத்தில் வந்துட்டு போறாங்களாம். தலைப்பின் பெயர் திரை உலகத்தினாராம். கூத்தாடிகளை சொம்பு தூங்குவதில் மீடியாக்கள் தரம் தாழ்த்தி விட்டது ..

KAVYAJun 9, 2022 - 04:51:46 PM | Posted IP 162.1*****

நாட்டுக்கு ரொம்ப தேவையான விஷயம்தான். என்ன TUTYONLINE ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory