» சினிமா » செய்திகள்

சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரம் பரிசளித்த கமல்!

புதன் 8, ஜூன் 2022 4:08:53 PM (IST)



விக்ரம் படம் வெற்றியடைந்ததையடுத்து நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசளித்தார் கமல்ஹாசன்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான  விக்ரம் படம் ஜூன் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகி  தற்போது பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, இப்படத்தின் வசூலும் விரைவில் ரூ. 200 கோடியைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அளித்ததால் அதற்கு மதிப்பளிக்கும் விதமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு காரும், அவருடைய உதவி இயக்குநர்களுக்கு இருசக்கர வாகனத்தையும் பரிசளித்த கமல்ஹாசன் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் தோன்றி அசரவைத்த நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தைப் பரிசளித்துள்ளார். அதைப் பெற்றுக்கொண்ட சூர்யா "இப்படியான தருணம் வாழ்க்கையை அழகாக மாற்றுகிறது. மிக்க நன்றி கமல்ஹாசன் அண்ணா” எனத் தெரிவித்துள்ளார்.

 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory