» சினிமா » செய்திகள்

ரஜினியுடன் கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் சந்திப்பு

திங்கள் 30, மே 2022 11:26:41 AM (IST)



சென்னை போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை கமல்ஹாசனும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் சந்தித்து பேசியுள்ளனர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ‘விக்ரம்’. இதில், விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன்வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யா, சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழியில் உருவாகியுள்ள இப்படம், ஜூன் 3-ம்தேதி வெளியாகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு, கமல்ஹாசன் நடித்துள்ள படம் வெளிவருவதால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் கமல்ஹாசன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதையொட்டி, தற்போது அவர் மலேசியா சென்றுள்ளார்.

அங்கு செல்வதற்கு முன்பு,நடிகர் ரஜினிகாந்தை, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று கமல்ஹாசனும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் சந்தித்து பேசியுள்ளனர். அந்த புகைப்படத்தை, லோகேஷ் கனகராஜ் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory