» சினிமா » செய்திகள்

ரஹ்மான் இசையில் பார்த்திபனின் இரவின் நிழல் டீசர் வெளியீடு!

திங்கள் 2, மே 2022 10:38:09 AM (IST)



இயக்குநர், நடிகர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

ஒத்த செருப்பு படத்திற்கு பின்னர் பார்த்திபன் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஒத்த செருப்பு படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தைப் போல இரவின் நிழல் படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் பார்த்திபன், வரலெட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இரவின் நிழல் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ரஹ்மானின் மயக்கும் இசையுடன் தொடங்கும் டீசர் 1.38 நிமிடங்கள் ஓடுகிறது. செவ்வியலாகத் தொடங்கி மெல்ல வேகமெடுத்து மாறும் ரஹ்மானின் இசை, பார்த்திபன் முத்திரை கதை சொல்லல் காட்சிகளுக்குள் நம்மைக் கைபிடித்துக் கூட்டி சென்று, விவரிக்க முடியாத துயரம் போல பொட்டில் அடித்து நின்று விடுகிறது. இந்த டீசர் இசை படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்திருக்கிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory