» சினிமா » செய்திகள்

நடிகர் விமல் ரூ.5 கோடி மோசடி: சினிமா தயாரிப்பாளர் புகார்!

புதன் 20, ஏப்ரல் 2022 5:20:25 PM (IST)

நடிகர் விமர் ரூ.5கோடி மோசடி செய்து விட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார். 

அரசு ஃபிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்திவரும் கோபி என்பவர் அளித்துள்ள புகார் மனுவில், "மன்னர் வகையறா படத்துக்காக தன்னிடமிருந்து ரூ.5 கோடியை நடிகர் விமல் கடனாக பெற்றார். அதற்காக இருவரும் ஒப்பந்தமும் போட்டுக்கொண்டோம். மன்னர் வகையறா படம் வெளியாகி நல்ல லாபம் பெற்றபோதிலும் தன்னிடம் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றினார். 

கடந்த சில மாதங்களுக்கு முன் 1.30 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தி, மீதமுள்ள  தொகையை 6 மாதத்தில் தருவதாக உறுதியளித்தார். பின்னர் பொய்யான காரணங்களக் கூறி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் என் மீது புகார் அளித்தார். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரூ. 3 கோடி தருவதாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஒப்புக்கொண்டார். பணம் குறித்து அவரிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுக்கிறார்'' என அவர் தன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory