» சினிமா » செய்திகள்

நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவு : கமல்ஹாசன் புகழஞ்சலி

திங்கள் 17, ஜனவரி 2022 5:12:46 PM (IST)"இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக் கொண்டவர்" என்று கதக் நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

கதக் நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜு மகாராஜ் நேற்று (ஜன. 16) இரவு காலமானார். அவருக்கு வயது 83. டெல்லியில் உள்ள தனது வீட்டில் பேரப் பிள்ளைகளுடன் நேற்றிரவு விளையாடிக் கொண்டிருந்த போது பிர்ஜு மகாராஜ் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பிர்ஜு மகாராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். 

சமீப காலமாக சிறுநீரகக் கோளாறு காரணமாக பிர்ஜு மகாராஜ் டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தில் இடம்பெற்ற ‘உனைக் காணாது’ என்ற பாடலுக்கு நடனப் பயிற்சி கொடுத்தவர் பிர்ஜு மகாராஜ். இப்பாடலுக்காக சிறந்த நடன இயக்கத்துக்கான தேசிய விருதை பிர்ஜு மகாராஜ் பெற்றார்.  பிர்ஜு மகாராஜின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிர்ஜு மகாராஜின் மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில், "ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார்.ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும்,விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம். இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’” என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory