» சினிமா » செய்திகள்

கமல்ஹாசனின் உடல் நிலை குறித்து வதந்தி: மக்கள் நீதி மய்யம் விளக்கம்

செவ்வாய் 30, நவம்பர் 2021 3:55:34 PM (IST)கமல்ஹாசனின் உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் குறித்து மக்கள் நீதி மய்யம் விளக்கம்  அளித்துள்ளது. 

அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் கமல்ஹாசனுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.  இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்ததாவது, ''கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து இன்னும் வீடு திரும்பவில்லை. ஆனால் நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனையில் கால் அறுவை சிகிச்சை முடிந்து தலைவர் வீடு திரும்பியபோது வெளியான புகைப்படம்'' என்று குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory