» சினிமா » செய்திகள்

தீபாவளி போட்டியிலிருந்து விலகியது சிம்புவின் மாநாடு

திங்கள் 18, அக்டோபர் 2021 4:10:26 PM (IST)



சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படம் தீபாவளிக்கு வெளியாகாது என்று அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் வரும் தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென தீபாவளிப் போட்டியிலிருந்து ‘மாநாடு’ படம் பின்வாங்கியுள்ளது. 

இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று (அக். 18) வெளியிட்டுள்ள அறிக்கையில் ''நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பலனாக அறுவடைக்குக் காத்திருக்கிறது ‘மாநாடு’. முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டு விட்டன. ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களைப் பார்ப்பது வழக்கம். அதைக் கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம்.

போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படிப் பார்ப்பது வியாபார புத்திசாலித்தனமுமல்ல. நமது 'மாநாடு' நன்றாக, திருப்தியாக வந்துள்ளது. அதன் மீது மிகப்பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கிவிடலாம்தான். ஆனால், என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது.

அதேபோல விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டுக்குப் பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும். நட்டமடையக் கூடாது. சில காரணங்களுக்காக ஏன் என் படமும் அதன் வெற்றியும் பலியாக வேண்டும்? அதனால் 'மாநாடு' தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாக உள்ளது. நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகும். 'மாநாடு' தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது''. இவ்வாறு சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Thoothukudi Business Directory