» சினிமா » செய்திகள்

விவேக் இடத்தையும் நிரப்ப வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கிறேன்: வடிவேலு பேட்டி

சனி 11, செப்டம்பர் 2021 11:21:49 AM (IST)

மறைந்த விவேக் இடத்தையும் நிரப்ப வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கிறேன் என நடிகர் வடிவேலு கூறினார். 

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் அவர் பேசும் போது, நான் நடிக்காமல் இருந்த நேரத்தில், கரோனா வந்து என் பிரச்சனையை சாதாரணமாக ஆக்கிவிட்டது. அந்த நேரத்தில் மக்களுக்கு நான் நடித்த காமெடி காட்சிகள் கைகொடுத்தது. தொடர்ந்து நான்கு படத்தில் நடிக்க இருக்கிறேன். 

எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் சுபாஷ் கரண், சபாஷ் கரணாக மாறிவிட்டார். இந்த நேரத்தில் கடவுளுக்கு நன்றி, மக்களுக்கு நன்றி. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. நான் எப்போ அவரை பார்த்தேனோ அப்பவே லைப் பிரைட்டா மாறிவிட்டது.எனக்கு எண்டே கிடையாது. நான் கால் வச்ச இடத்தில் எல்லாம் கண்ணிவெடி வச்சாங்க.. எல்லாத்திலயும் தப்பித்து விட்டேன். என் மீது வந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய். இனிமேல் சங்கர் தயாரிப்பில், இயக்கத்தில் நடிக்க மாட்டேன். அதுபோல் வரலாற்று படத்தில் நடிக்க மாட்டேன்.

திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் கூட நடிப்பேன். விவேக் எனக்கு அருமையான நண்பர். அவரது இழப்பை மறக்க முடியாது. மிகப்பெரிய வேதனை. விவேக் இடத்தையும் நிரப்ப வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கிறேன். நாய் சேகர் படத்தின் தலைப்பு எனக்கு கண்டிப்பாக கிடைக்கும். இந்த படத்தில் ஒரு பாட்டு பாட இருக்கிறேன். நான் சினிமாவில் நடிக்க இருக்கும் செய்தி கேள்விப்பட்டு, லாரன்ஸ், சிவகார்த்திகேயன், அர்ஜுன் உள்ளிட்ட பலர் போன் செய்து வாழ்த்து சொன்னார்கள்’ என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory