» சினிமா » செய்திகள்

கார்த்தி படத்தின் நாயகியாக இயக்குநர் ஷங்கர் மகள் அறிமுகம்!

திங்கள் 6, செப்டம்பர் 2021 10:52:04 AM (IST)



சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தின்  நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி அறிமுகமாகிறார்.

2015ஆம் ஆண்டு வெளியான ‘கொம்பன்’ படத்துக்குப் பிறகு கார்த்தி - முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்துக்கு ‘விருமன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படும் ஷங்கரின் இளைய மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகிறார். அதிதி இடம்பெற்றுள்ள ‘விருமன்’ பட போஸ்டரை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் சூர்யா ‘அதிதி ஷங்கரை வரவேற்கிறேன்! நீ அனைவரது இதயங்களையும் வெல்லப் போகிறாய். கடவுள் ஆசிர்வதிக்கட்டும். உன் வரவு நல்வரவு ஆகுக’ என்று கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory