» சினிமா » செய்திகள்

விஜே ஆனந்தக் கண்ணன் மரணம்: பிரபலங்கள் இரங்கல்

புதன் 18, ஆகஸ்ட் 2021 10:24:14 AM (IST)

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆனந்தக் கண்ணன் புற்றுநோயால் உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

90களின் இறுதியில் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்தக் கண்ணன். சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான இவர் ஆர்.ஜே.வாகப் பணியாற்றி, பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானார். இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கும், தொகுத்து வழங்கும் பாணிக்கும் தனி ரசிகர் கூட்டம் உருவானது. 

தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ‘சிந்துபாத்’, ‘விக்ரமாதித்யன்’ உள்ளிட்ட தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாகத் தொலைக்காட்சிகளில் தலைகாட்டாமல் இருந்துவந்த ஆனந்தக் கண்ணன் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக ஒப்பந்தமானார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஆனந்தக் கண்ணன் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory