» சினிமா » செய்திகள்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்திற்கு யூ சான்றிதழ்

புதன் 23, ஜூன் 2021 11:21:06 AM (IST)



ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான 'தலைவி' படத்துக்கு தணிக்கையில் ‘யூ’ சான்று வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை, தலைவி என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துள்ளது. தலைவி படத்தின் தமிழ் பதிப்பை தணிக்கைக்கு அனுப்பினர். 

தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து காட்சிகளை வெட்டாமல் ‘யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். ஏற்கனவே தலைவி படத்தை கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு கொரோனா ஊரடங்கினால் முடங்கியது. ஓ.டி.டி. தளத்தில் வெளியாகலாம் என்று பரவிய தகவலை படக்குழுவினர் மறுத்தனர். விரைவில் தியேட்டர்களை திறக்க அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். படத்தை ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory