» சினிமா » செய்திகள்

190 நாடுகள், 17 மொழிகளில் வெளியாகும் ஜகமே தந்திரம்!

செவ்வாய் 15, ஜூன் 2021 3:40:07 PM (IST)

ஓடிடியில் ஜூன் 18ல்  வெளியாகவுள்ள ஜகமே தந்திரம் படம் 190 நாடுகளில் ஒளிபரப்பாகவுள்ளது.

ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். 

2020 மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. திரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் நிலவுவதால் ஜகமே தந்திரம் படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் ஜகமே தந்திரம் படம் 190 நாடுகளில் ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் தமிழில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 16 மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜகமே தந்திரம் படத்தை ரசிகர்கள் தமிழ் உள்பட 17 மொழிகளில் கண்டுகளிக்க முடியும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory