» சினிமா » செய்திகள்

நடிகர் சார்லி பெயரில் போலி ட்விட்டர் கணக்கு: கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

வெள்ளி 11, ஜூன் 2021 4:34:20 PM (IST)

தனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம் நடிகர் சார்லி புகார் அளித்துள்ளார்.

தமிழில் வருஷம் 16, காதலுக்கு மரியாதை, உன்னை நினைத்து, மாநகரம் உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சார்லி. இயக்குநர் கே. பாலசந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 1983 ஆம் ஆண்டில் அறிமுகமானவர். கடந்த 35 வருடங்களுக்கும் மேலாகத் நடித்து வருகிறார். 2019-ல் தமிழ்த் திரைப் படங்களில் நகைச்சுவை குறித்து ஆய்வு செய்ததற்காக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.  இந்நிலையில் நடிகர் சார்லி பெயரில் ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 

இதை அதிகாரபூர்வமான கணக்கு என நம்பி ரசிகர்களும் பலரும் அந்தக் கணக்கைப் பின்தொடர ஆரம்பித்துள்ளார்கள். இதையடுத்து தன் பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்களைப் பற்றி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார் சார்லி.  எந்தச் சமூகவலைத்தளங்களிலும் எனக்குக் கணக்கு இல்லை. என் பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சார்லி புகார் அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory