» சினிமா » செய்திகள்

சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்த ஆர்யாவின் படம்!

புதன் 9, ஜூன் 2021 12:16:15 PM (IST)ஆர்யா நடித்துள்ள மகா முனி திரைப்படம் 9 சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

சாந்த குமார் இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் வெளியான படம் மகாமுனி. ஆர்யா டுயல் ரோலில் நடித்திருந்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்திருந்தார். ஏற்கனவே மௌனகுரு படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களைன் கவணத்தை ஈர்த்த இயக்குனர் சாந்த குமார் இந்த படத்தையும் நல்ல சஸ்பன்ஸ் த்ரில்லர் படமாகவே கொடுத்திருந்தார். பெரிய ஓப்பனிங் கோடிகளில் முதல் நாள் கலைக்‌ஷனெல்லாம் இந்த படத்திற்கு இல்லை ஆனாலும், ரசிகர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்களின் பாராட்டுகளால் படம் ரசிகர்களின் கவணத்தை ஈர்த்து வெற்றிப் பெற்றது. 

ஆர்யாவின் அசாதாரமான நடிப்பு இந்த படத்தில் மீண்டும் வெளிக்காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து பல சர்வதேச விழாக்களுக்கும் பல திரைப்பட போட்டிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட இந்த படம் இதுவரை 9 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது, மேலும் 2 விருதுகளில் இறுதிச்சுற்று வரை சென்றுள்ளது, 1 சிறந்த வேற்றுமொழி பட விருது நாமினேஷன். என முத்திரை பதித்துள்ளது. இது தவிர இன்னும் 2 விருதுக்கான செலக்‌ஷன் லிஸ்டிலும் இந்த படம் உள்ளது. இந்த விருதுகள் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory