» சினிமா » செய்திகள்

பிசாசு 2: பேய் ஓட்டும் மந்திரவாதியாக விஜய் சேதுபதி..!

புதன் 9, ஜூன் 2021 12:09:53 PM (IST)மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் ரசிகர்களின் சர்ப்ரைஸ் எலிமெண்ட்டாக விஜய் சேதுபதி ஒரு வித்யாசமான ரோலில் தோன்றவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2016ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி வெகுவாக ரசிகர்களை ஈர்த்த படம் தான் பிசாசு. பேய்களை குறுரமாக காட்டும் பல படங்களுக்கு மத்தியில் பேயை தேவதையாக காட்டிருந்தார் மிஷ்கின். இந்த மாறுதலே ரசிகர்களை கவர்ந்திருந்தது, 

இதனை தொடர்ந்து பிசாசு 2 படத்திற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இதில் நாயகியாக ஆண்ட்ரியா நடித்துவருகிறார். மிஷ்கினின் பேவரட் நாயகி பூர்ணா மற்றொரு நாயகியாக நடித்து வருகிறார். கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ரசிகர்களின் சர்ப்ரைஸ் எலிமெண்ட்டாக விஜய் சேதுபதி ஒரு வித்யாசமான ரோலில் தோன்றவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பிஸியாக இருந்து வரும் விஜய் சேதுபதி இந்த படத்தில் பேய் ஓட்டுபவராக நடிக்கவுள்ளாராம். இவரின் இந்த கதாப்பாத்திரம் படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் படியாக  அமைக்கப்பட்டுள்ளதாம். விஜய் சேதுபதியின் எண்ட்ரி ரசிகர்களை குதுகலப்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளா இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் ஊரடங்கிற்கு பிறகு விறுவிறுப்பாக நடைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory