» சினிமா » செய்திகள்

ட்ராப்பான படத்திற்கு உயிர் கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான்!!

புதன் 9, ஜூன் 2021 12:02:50 PM (IST)ட்ராப் ஆனதாக கருதப்பட்ட சிம்புவின் "பத்து தல" படத்திற்கான இசை பதிவு வேலைகளை ஏ.ஆர்.ரஹ்மான் துவங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சிம்பு தற்போது கோலிவுட்டில் மீண்டும் தனது வருகையை வலுவாக பதிவிட போராடிக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகிவரும் அவர் நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்வதிலும் கவணம் செலுத்தி வருகிறார். வெங்கட் பிரபு, சுசிந்திரன், ராம் என கதைக்கு முக்கியதும் கொடுக்கும் இயக்குனர்களாக அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்துள்ள இவர், இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற முஃப்தி இதன் தமிழ் ரீமேக் தான் பத்து தல. இதன் பணிகள் தொடங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழிலும் இயக்குனர் நரதனே இயக்கி வந்தார். தமிழ் ரீமேக் தாமதமானதால் கன்னடத்தில் யாஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க கமிட்டானார் நரதன். 

இதனால் முஃப்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு, படத்தை இயக்க சில்லுனு ஒரு காதல் இயக்குநர் கிருஷ்ணா கமிட் ஆனார். பத்து தல என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இந்த படத்திற்கான இசை பதிவு வேலைகளை ஏ.ஆர்.ரஹ்மான் துவங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தில் இடம்பெறும் 2 பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு செய்துவிட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. நீண்ட நாட்களாக இந்த படம் குறித்த எந்த தகவலும் வராததால் படம் ட்ராப்பாகி விட்டதாகவே ரசிகர்கள் கருதிய நிலையில் இந்த படத்தின் பணிகள் தொடர்ந்து நடந்துக்கொண்டிருக்கிறது என ஏ.ஆர். ரஹ்மான் மூலமாக உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனல் ரசிகர்கள் மீண்டும் பத்து தல படத்தின் மீது கவணம் செலுத்த துவங்கிவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory