» சினிமா » செய்திகள்

சர்வதேச பட விழாவில் நயன்தாராவின் கூழாங்கல் திரைப்படம் திரையிட தேர்வு

செவ்வாய் 1, ஜூன் 2021 5:29:22 PM (IST)

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்த கூழாங்கல் என்ற தமிழ் திரைப்படம் உக்ரைன் நாட்டில் கீவ் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது.

திரைப்பட விழாவில் துவக்க நாளான் மே 29ல் கூழாங்கல் திரையிடப்பட்டது. திரைப் படவிழாவின் இறுதி நாளான் ஜூன் 6ந்தெதி 2வது நாளாக திரையிடப்பட உள்ளது. கூழாங்கல் படத்தை பி.எஸ். வினோத் ராஜ் இயக்கி உள்ளார். குடிகார தந்தைக்கும், மகனுக்குமான உறவை மையப்படுத்தி கதை உருவாகி உள்ளது.

"கூழாங்கல் படம் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. இத்திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்வது என முடிவு செய்துள்ளோம்'' என்று நயன்தாரவும், விக்னேஷ் சிவனும் தெரிவித்து இருந்தனர்.இதையடுத்து கூழாங்கல் படம் நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றது. ரோட்டர்டாம் சர்வதேச விழாவில் விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவிலும் கூழாங்கல் திரையிடப்பட்டு சிறந்த திரைப்படத்துக்கான விருதை வாங்கியது.இந்த நிலையில் உக்ரைனில் ஆண்டுதோறும் நடைபெறும் கீவ் நகரில் மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் கூழாங்கல் படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு கிடைத்த இன்னொரு சர்வதேச அங்கீகாரமாக இது கருதப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory