» சினிமா » செய்திகள்

விஜய் படத்தை இயக்குகிறேன்: உறுதி செய்தார் வம்சி!!

திங்கள் 31, மே 2021 4:27:44 PM (IST)

விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கவுள்ளார்.

மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது விஜய் நடிக்கும் 65-வது படம். இந்நிலையில் விஜய்யின் 66-வது படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் உருவான தோழா படத்தை இயக்கியவர் பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி. விஜய்யின் 66-வது படத்தை வம்சி இயக்கவுள்ளார். இது பற்றி, தெலுங்கு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் உறுதி செய்துள்ளார். கரோனா ஊரடங்குக்குப் பிறகு இதுபற்றிய செய்தி அதிகாரபூர்வமாக வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

விஜய் - வம்சி இணையும் படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். விஜய் 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது. 2007-ல் முன்னா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வம்சி இதுவரை தோழா உள்பட ஐந்து படங்களை இயக்கியுள்ளார். 2019-ல் மகேஷ் பாபு நடிப்பில் வம்சி இயக்கிய மஹர்ஷி, சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory