» சினிமா » செய்திகள்

தி ஃபேமிலி மேன் வெப் தொடரில் நடித்தது சாதனை: சமந்தா பெருமிதம்

ஞாயிறு 30, மே 2021 9:08:08 AM (IST)தி ஃபேமிலி மேன் 2 இந்தி வெப் தொடரில் நடித்திருப்பது தான் தன் மிகப்பெரிய சாதனை என்று சமந்தா தெரிவித்துள்ளார். தி ஃபேமிலி மேன் 2 தொடருக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘பாணா காத்தாடி’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானவர், சமந்தா. சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்த இவர் ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் அதிகளவில் நடித்து வந்தார். பின்னர் ஐதராபாத்தில் குடியேறினார். அப்போது இவருக்கும், நாக சைதன்யாவுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்கு பிறகும் சமந்தா திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

இந் நிலையில் அவர், தி ஃபேமிலி மேன் என்ற வெப் தொடரில் நடித்தார். அதில் அவர் பெண் விடுதலைப்புலியாக நடித்து இருக்கிறார். தமிழர்களை தீவிரவாதிகள் போன்று சித்தரித்துள்ளதாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜூன் மாதம் 4ம் தேதி அந்த தொடர் அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கிறது. அந்த தொடரில் தமிழ் பேசும் பெண்ணான சமந்தாவை தீவிரவாதியாக காட்டி தமிழர்களின் மனதை புண்படுத்தி விட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்நிலையில் தி ஃபேமிலி மேன் 2 தொடரில் நடித்தது பற்றி சமந்தா கூறியிருப்பதாவது: தி ஃபேமிலி மேன் 1 தொடரை முதல் நாளே பார்க்க முடியவில்லை. ஆனால் அது குறித்து விமர்சனங்கள் வந்து குவிந்தது. அதனாலேயே தி ஃபேமிலி மேன் தொடரை பார்க்கும் ஆவல் அதிகரித்தது. மறுநாளே நானும், கணவரும் சேர்ந்து அந்த தொடரை பார்த்தோம். ஒரு எபிசோடை பார்த்துவிட்டு மற்றவற்றை வாரம் முழுக்க பார்க்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை.

தி ஃபேமிலி மேன் 2 பற்றி முதல் நாளில் விமர்சனங்களை பார்த்தேன். எனக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அனைவருக்கும் அது பிடித்துவிட்டது. எனக்கு பெருமையாக இருந்தது. அந்த தொடரில் நடித்தது தான் என் பெரிய சாதனையாகும்.தி ஃபேமிலி மேன் 2 தொடரை பார்த்தபோது காமெடி, ஆக்ஷன் கலந்த பிளாக்பஸ்டர் படம் பார்த்தது போன்று இருந்தது. நீ நல்ல முடிவு எடுத்திருக்கிறாய் என்று என்னை நானே தட்டிக் கொடுத்தேன் என்றார்.

தி ஃபேமிலி மேன் 2 இந்தி தொடரை ராஜ் மற்றும் டிகே ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். அந்த தொடரில் தமிழர்களை காயப்படுத்தும் வகையில் எந்த காட்சியும் இல்லை என்கிறார்கள் அவர்கள். தி ஃபேமிலி மேன் 2 தொடர் தான் சமந்தா நடித்திருக்கும் முதல் வெப் தொடர் ஆகும்.அவரின் முதல் வெப் தொடருக்கே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தி ஃபேமிலி மேன் 2 தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர். தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று தி ஃபேமிலி மேன் 2 தொடருக்கு மத்திய அரசு தடை விதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory