» சினிமா » செய்திகள்

ராட்சசன் கதாபாத்திரத்தை விடவும் மோசமானவர்கள் இருக்கிறார்கள் : இயக்குநர் ராம்குமார்

செவ்வாய் 25, மே 2021 5:13:15 PM (IST)

ராட்சசன் படத்தில் இடம்பெற்ற இன்பராஜ் கதாபாத்திரம், பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக அப்படத்தின் இயக்குநர் ராம்குமார் கூறியுள்ளார்.

சென்னை கே.கே. நகா் தனியாா் பள்ளியில் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் ஆசிரியா் ராஜகோபாலன் என்பவர் கைது செய்ய்யப்பட்டாா். இதையடுத்து இச்சம்பவத்தையும் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படத்தின் காட்சிகளையும் ஒப்பிட்டு ட்விட்டரில் எழுதப்பட்ட பதிவுக்கு அப்படத்தின் இயக்குநர் ராம்குமார் கூறியதாவது: ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யபடவில்லை. பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory