» சினிமா » செய்திகள்

ஆட்டோகிராஃப் புகழ் பாடகர் கோமகன் காலமானார்

வியாழன் 6, மே 2021 12:10:30 PM (IST)



ஆட்டோகிராஃப் படத்தில் நடித்த பிரபல பாடகர் கோமகன் கரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 

ஆட்டோகிராஃப் படத்தில் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே! என்ற பாடல் மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர் பாடகர் கோமகன். இந்த பாட்டில் மனிதா உன் மனதைக் கீறி விதை போடு உரமாகும்.. என்ற வரிகளைப் பாடியிருப்பார்.  பல்வேறு கச்சேரிகளில் பாடிவந்த இவருக்கு இயக்குனர் சேரன் தன்னுடைய படத்தில் வாய்ப்பு வழங்கினார்.

நாகர்கோவிலை பூர்விகமாகக் கொண்ட பார்வை மாற்றுத்திறனாளியான இவர் சென்னை மாதவரத்தில் உள்ள தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் பணிபுரிந்து வந்தார். இசைக் கச்சேரிகளையும் நடத்தி வந்தார்,  பின்னர் சேரன் பட வாய்ப்புக்குப் பிறகு சினிமாவில் ஒரு சில படங்களில் பணிபுரிந்து வந்தார். அவ்வப்போது கச்சேரியும் நடத்தி வந்தார். 

இதனிடையே சென்னை ஐசிஎப்-இல் அரசு வேலை கிடைத்தது. சமீபத்தில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.  இந்நிலையில் அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஐசிஎப் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று நள்ளிரவு 1 மணியளவில் காலமானார். 

அவரது மறைவுக்கு இயக்குநர் சேரன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்... அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது.. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory