» சினிமா » செய்திகள்

சட்டமன்ற தோ்தலில் தோல்வியடைந்த நட்சத்திரங்கள்!

செவ்வாய் 4, மே 2021 11:23:36 AM (IST)

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட, மக்கள் நீதி மய்யம் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன், நடிகைகள் குஷ்பு, ஸ்ரீப்ரியா உள்ளிட்டோா் தோல்வியைச் சந்தித்தனா்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடந்தது. இதில், நடிகரும், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி மட்டும் சேப்பாக்கம் தொகுதியில் 59,091 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். மற்ற சினிமா நட்சத்திரங்கள் தோல்வியைச் சந்தித்தனா். 

குறிப்பாக, கோயம்புத்தூா் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தோல்வியைத் தழுவினா். அவா் தன்னை எதிா்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனிடம் 1,439 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாா்.

திருவொற்றியூா் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான் தோல்வியைச் சந்தித்தாா். பாஜக சாா்பில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்பு 33,044 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா். இதுபோல, மக்கள் நீதி மய்யம் சாா்பில் மயிலாப்பூா் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஸ்ரீப்ரியா, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட பாடலாசிரியா் சினேகன், அந்தத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட நடிகா் மயில்சாமி ஆகியோா் தோல்வியைச் சந்தித்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory