» சினிமா » செய்திகள்

திரைத்துறைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் : விஷால் வாழ்த்து

திங்கள் 3, மே 2021 3:56:38 PM (IST)

நமது தமிழகத்துக்கு நல்ல விஷயங்கள் கிடைத்துச் செழிக்கட்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.  இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "இந்த அற்புதமான வெற்றிக்கு திமுகவுக்கு வாழ்த்துகள்.  அன்பு நண்பர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் ஆகியோருக்கு நன்றி. நம் முதல்வர் மு.க.ஸ்டாலினை வருக வருக என வரவேற்கிறேன். அடுத்த சில வருடங்களில் நமது தமிழகத்துக்கு நல்ல விஷயங்கள் கிடைத்துச் செழிக்கட்டும். உடைந்து போயிருக்கும் நமது திரைத்துறைக்கும் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று பதிவு செய்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory