» சினிமா » செய்திகள்

திமுக வெற்றி: தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து

திங்கள் 3, மே 2021 10:52:42 AM (IST)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 158 தொகுதிகளில் வென்றுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.

இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory