» சினிமா » செய்திகள்

அஜித்தின் 50வது பிறந்தநாள்: சிவகார்த்திகேயன் வாழ்த்து

சனி 1, மே 2021 12:02:33 PM (IST)



அஜித்தின் 50வது பிறந்தநாளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் இன்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலரும் அஜித்தின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், ஏகன் படத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து கூறி இருக்கிறார்.

நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துகள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory