» சினிமா » செய்திகள்

மூத்த நடிகர் செல்லதுரை காலமானார் : திரையுலகினர் இரங்கல்

வெள்ளி 30, ஏப்ரல் 2021 4:50:46 PM (IST)

அறம், தெறி, மாரி படங்களில் நடித்து கவனம் பெற்ற நடிகர் செல்லத்துரை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84.

மதுரையைச் சேர்ந்த செல்லதுரை 1963-ல் எம்.ஜி.ஆர். நடித்த பணக்காரக் குடும்பம் படத்தில் நடிகராக அறிமுகமானார். அதற்கு முன்பு நாடகங்களில் நடித்து வந்தார். அந்நியன், சிவாஜி, ராஜா ராணி, கத்தி, அறம், தெறி, மாரி, நட்பே துணை போன்ற படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள தன்னுடைய இல்லத்தில் காலமானார் செல்லதுரை. அவருடைய மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory