» சினிமா » செய்திகள்

பாஜகவை விமர்சித்தால் கொலை மிரட்டல் வருகிறது : நடிகர் சித்தார்த் புகார்

வெள்ளி 30, ஏப்ரல் 2021 12:08:48 PM (IST)

கொலை மிரட்டல்கள் வந்தாலும் நான் பேசுவதை நிறுத்த போவதில்லை என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார். 

நடிகர் சித்தார்த் வலைத்தள பக்கத்தில் சமூக, அரசியல் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். வட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடுகளை கண்டிக்கும் வகையில் பா.ஜனதாவையும் விமர்சித்து பதிவுகள் வெளியிடுகிறார். சமீபத்தில் மேற்கு வங்கத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் இலவச தடுப்பூசி போடப்படும் என்ற பதிவுக்கு பதிலடியாக பா.ஜனதா அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படும்போதுதான் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அர்த்தம் என்றார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது என்று பொய் சொன்னால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அங்குள்ள பா.ஜனதா முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சொன்ன கருத்தை விமர்சித்து துறவியோ, தலைவரோ யாராக இருந்தாலும் பொய் சொன்னால் முகத்தில் அறைவிழும் என்றார். சித்தார்த் கருத்துக்கள் பா.ஜனதா கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக சித்தார்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனது போன் நம்பரை தமிழக பா.ஜனதா கட்சியினர் வெளியிட்டு இருக்கிறார்கள். இதனால் 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன. எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல். பாலியல் மிரட்டல்கள் விடுத்துள்ளனர். அவர்கள் போனில் பேசியதை பதிவு செய்து போலீசிடம் ஒப்படைத்துள்ளேன். நான் பேசுவதை நிறுத்த போவதில்லை என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

balaji shankarApr 30, 2021 - 03:59:50 PM | Posted IP 162.1*****

thiruttu paya.. vimarsanam pannalum athula oru mariyathai venam... dravida yechakalai ivan

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory