» சினிமா » செய்திகள்

நெட்ஃபிளிக்ஸில் ஜூன் 18ஆம் தேதி ஜகமே தந்திரம் ரிலீஸ் : அதிகாரபூர்வ அறிவிப்பு

புதன் 28, ஏப்ரல் 2021 4:56:56 PM (IST)

தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம் கரோனா அச்சுறுத்தல் தொடங்கும் முன்பே தயாராகிவிட்டது. கரோனா ஊரடங்கு சமயத்திலேயே ஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபட்டது. 

ஆனால், இறுதி செய்யப்படாமல் இருந்தது. ஏலே பட வெளியீடு தொடர்பாகத் திரையரங்க உரிமையாளர்களுடன் தயாரிப்பாளர் சசிகாந்துக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புக்கு ஏலே படத்தைக் கொடுத்துவிட்டார். பின்பு, ஜகமே தந்திரம் படத்தையும் ஓடிடி வெளியீட்டுக்குக் கொடுத்துவிட்டார். ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் பெரும் விலை கொடுத்து ஜகமே தந்திரம் படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

நேரடி ஓடிடி வெளியீடு குறித்து தனுஷ் தரப்பில் அதிருப்தி நிலவி வந்தாலும் மேற்கொண்டு இது குறித்து தயாரிப்பாளர் தரப்பில் யாரும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஜகமே தந்திரம் படத்துக்கு 18+ என்கிற மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க உகந்த திரைப்படமாக ஜகமே தந்திரம் மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஜூன் 18ஆம் தேதி அன்று படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமா அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்துப் பகிரப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory