» சினிமா » செய்திகள்

நடிகர் விவேக் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய விஜய்

திங்கள் 26, ஏப்ரல் 2021 5:01:26 PM (IST)

ஜார்ஜியாவிலிருந்து திரும்பியுள்ள விஜய், விவேக்கின் வீட்டுக்குச் சென்று அவருடைய குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக், மாரடைப்பால் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். விவேக் உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. விவேக்கின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்றிருந்தார். இன்று ஜார்ஜியாவிலிருந்து சென்னை திரும்பிய விஜய், இன்று காலை விவேக்கின் இல்லத்துக்குச் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory