» சினிமா » செய்திகள்

இரவு ஊரடங்கால் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பிற்கு சிக்கல்!!

வெள்ளி 23, ஏப்ரல் 2021 5:24:09 PM (IST)

இரவு ஊரடங்கு காரணமாக ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. கரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால், ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு மட்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார்களாம். 

தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என்பதால் இவ்வாறு செய்கிறார்களாம். மேலும், இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தினால் தான் உரிய நேரத்தில் படத்தை முடிக்க முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளதாம். அதனால் தற்போது தெலங்கானாவில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், அம்மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று அண்ணாத்த படப்பிடிப்பை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory