» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: சிறந்த அணியாக இந்தியா தேர்வு

செவ்வாய் 28, மார்ச் 2023 3:58:44 PM (IST)

மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் 4 தங்கப்பதக்கம் பெற்ற இந்திய அணி சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டது. 

மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் கடைசி நாளில் இறுதிச் சுற்றின்முதல் போட்டி நிகத் ஜரீனுக்கும் வியட்னாம் வீராங்கனை நிகுயென் தீ தம் என்பவருக்குமிடையே நடைபெற்றது. முதல் சுற்றில் நிகத்துக்கு ஆதரவாக 5-0 என்ற கணக்கில் முடிவானது என்றாலும் இரண்டாவது சுற்றில் 2-3 என்று முடிவு அவருக்கு எதிராகப் போனது. எனவே மூன்றாவது சுற்று பரபரப்பானது. அதில் சிறப்பாக செயல்பட்ட நிகத் ஜரீன் இறுதியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

54 கிலோ எடை பிரிவில் தைபேவைச் சேர்ந்த (தைவான்) ஹுவாங் வென், கொலம்பியாவைச் சேர்ந்த ஏரியஸ் மார்செல்லாவுடன் மோதினார். இதில் தைபே வீராங்கனை வெற்றி பெற்றார். 

60 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் மோதிக்கொண்ட இருவருமே தென் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பிரேசிலைச் சேர்ந்த ஃபெராரியா பீட்ரீஸ். மற்றவர் கொலம்பியாவைச் சேர்ந்த வால்டேஸ் பாலோ. இறுதியில் பிரேசில் வீராங்கனை வெற்றி பெற்றார். 75 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை லோவ்லினா ஆஸ்திரேலிய வீராங்கனை பார்க்கர் அனேவோடு மோதினார். 

இதில் முதல் சுற்றில் 3-2 என்ற கணக்கில் முன்னணி பெற்ற லோவ்லினா இரண்டாவது சுற்றில் 1-4 என்ற கணக்கில் பின் தங்கினார். மூன்றாவது சுற்றும் முடிந்ததும் பவுட் ரிவியூ முறை என்று அறிவிப்பு வர வெற்றியாளர் லோவ்லினா என்பது நிச்சயமாகும் வரை அரங்கில் அசாத்திய அமைதி. போட்டிகள் முடிவடைந்ததும் நான்கு தங்கப்பதக்கம் பெற்ற இந்திய அணி சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இந்திய வீராங்கனையாக நிகத் ஜரீன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory