» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியில் தினேஷ் கார்த்திக்!!

செவ்வாய் 20, செப்டம்பர் 2022 10:17:16 AM (IST)இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை அணிந்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக். 

37 வயதான தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் பெரிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரும்பியுள்ளார். இந்த முறை தொடர்ச்சியாக பல்வேறு டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் அவர் தவறாமல் இடம்பெற்று இருந்தார். அதன் பலனாக அடுத்த மாதம் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இந்திய அணியின் புதிய வெளிர் நீல வண்ணத்திலான ஜெர்சி நேற்று வெளியிடப்பட்டது. அதையடுத்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் அந்த ஜெர்சியை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தினேஷ் கார்த்திக்கும் புதிய ஜெர்சி அணிந்து கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டார். அதை தான் இப்போது அவர் பகிர்ந்துள்ளார்.  அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory