» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம்

வெள்ளி 16, செப்டம்பர் 2022 4:55:52 PM (IST)ஐபிஎல் 2023 சீசனுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டுக்கு நடுவே உலகம் முழுவதும் நடைபெறும் லீக் கிரிக்கெட் தொடர்களும் கவனம் ஈர்த்து வருகின்றன. அதில் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. மொத்தம் 10 அணிகள் கடந்த சீசனில் பங்கேற்று விளையாடி இருந்தன. அடுத்த ஆண்டும் 10 அணிகள் விளையாட உள்ளன.

இந்நிலையில், ஐபிஎல் அரங்கில் அதிக முறை (5) பட்டம் வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அறியப்படுகிறது. அந்த அணியில் ஆட்டத்தை வென்று கொடுக்கும் வல்லமை கொண்ட வீரர்கள் அதிகம் இடம்பிடித்திருப்பதே அதற்கு காரணம். அது தவிர அந்த அணியின் பயிற்சியாளர் அமைப்பும் உலகத் தரத்தில் இருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஐபிஎல் மட்டுமல்லாது, தென்னாப்பிரிக்க டி20 தொடர் மற்றும் அமீரக டி20 தொடர்களிலும் தனித்தனி அணியை களம் இறக்க உள்ளது.

அதற்கு உகந்த வகையில் மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்த ஜெயவர்த்தனே மற்றும் இயக்குநராக இயங்கி வந்த ஜாகீர் கானுக்கு உயர் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் ஐபிஎல், தென்னாப்பிரிக்க டி20 மற்றும் அமீரக டி20 அணிகளை கவனித்துக் கொள்வார்கள் எனத் தெரிகிறது. அதன் காரணமாக கிரிக்கெட் களத்தில் நீண்ட அனுபவம் கொண்ட முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் மார்க் பவுச்சரை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.

"மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நான் நியமிக்கப்பட்டதை கவுரவமாகவும், அதிர்ஷ்டமாகவும் பார்க்கிறேன்” என பவுச்சர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தென்னாப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அவர் விலகவுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory