» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கோலி அரைசதம் வீண் : இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்!

திங்கள் 5, செப்டம்பர் 2022 10:28:53 AM (IST)



ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. 

ஆசியக் கோப்பையின் நேற்று இரவு நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடின. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். 

இந்த ஜோடி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. முதல் 5 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் தலா 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். விராட் கோலி சீரான இடைவெளிகளில் பவுண்டரிகளை விரட்டினார். அதனால், இந்திய அணியின் ரன் ரேட் ஓவருக்கு 9க்கு கீழ் குறையாமல் சென்றது. இருப்பினும், சூர்யகுமார் யாதவ் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பின் விராட்  கோலி ஒரு முனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் தீபக் ஹூடா அவருக்கு உறுதுணையாக விளையாடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அவர் எதிர்கொண்ட 36வது பந்தில் சிக்ஸர் விளாசி அரைசதம் அடித்து அசத்தினார். தீபக் ஹூடா 16 ரன்களில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது.  அதனைத் தொடர்ந்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் நிதானமான தொடக்கத்தைத் தந்தாலும் பாபர் ஆசம் 14 ரன்களில் ரவி பிஷ்னாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மூன்றாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய ஃபக்தர் சமாமும் 15 ஆட்டமிழந்ததார். 

அதற்கடுத்து முகமது ரிஸ்வான் மற்றும் நவாஸ் இணை ஜோடி சேர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களைத் திணறடித்தனர். 15.2 ஓவரில் நவாஸ் 42 ரன்களில் புவனேஸ்வர்குமார்  பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  அதிரடியாக விளையாடிய ரிஸ்வான் 71 ரன்களில் இருந்தபோது அவுட் ஆனார். பின்னர், ஆசிப் அலி 16 ரன்களில் 19-வது ஓவரில் ஆட்டமிழந்தததும் ஆட்டம் பரபரப்பானது. இறுதியில் குஷ்தில் ஷா, ஃப்க்தார் அகம்து இணை 19.5 ஓவர் முடிவில் 182 ரன்களை எடுத்தது. இதனால், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய  அணியை பாகிஸ்தான் அணி வென்றது.

கேப்டன் ரோகித் விளக்கம்

"முதல் இன்னிங்ஸில் நாங்கள் எடுத்த 180 ரன்கள் சிறந்த ஸ்கோர். இந்த ஸ்கோர் எல்லாவிதமான ஆடுகளங்கள் மற்றும் கண்டீஷனிலும் சிறந்தது எனவும் கருதுகிறேன். நெருக்கடி மிக்க இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளத்தில் கொஞ்சம் மாற்றம் இருப்பதை கவனிக்க முடிந்தது. 

இந்த போட்டி எங்களுக்கு நல்லதொரு படிப்பினையை கொடுத்தது. இந்த மாதிரியான ஸ்கோரை Defend செய்யும் போது எங்களது மைண்ட் செட் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டோம். கோலி சிறப்பாக விளையாடி இருந்தார்” என ரோகித் தெரிவித்தார். இந்திய அணி அடுத்ததாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால் நடப்பு ஆசிய கோப்பையின் இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்யும்.


மக்கள் கருத்து

என்னதுSep 5, 2022 - 01:36:00 PM | Posted IP 162.1*****

நாட்டுக்கோழியா ?

கிரிக்கெட் பயித்தியங்களுக்குSep 5, 2022 - 01:34:59 PM | Posted IP 162.1*****

இந்தியா ஜெயிச்சால் பெட்ரோல் 50 ரூபாய் குறைக்க வாய்ப்பு.. நாடு நல்லா விளங்கிடும். கிரிக்கெட் போட்டிகள் எல்லாம் கார்பொரேட் கம்பெனிகளால் பணத்துக்காக உருவாக்கப்பட்டவை.

testSep 5, 2022 - 12:40:33 PM | Posted IP 162.1*****

test

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory