» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 4 டி-20 தொடர்களில் இந்திய அணி வெற்றி

திங்கள் 11, ஜூலை 2022 5:17:59 PM (IST)



இங்கிலாந்து அணிக்கு எதிராகக் கடைசியாக விளையாடிய 4 டி20 தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

நாட்டிங்கமில் நேற்று நடைபெற்ற  இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 3-வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. மலான் 77, லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இப்போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றாலும் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. சூர்யகுமார் யாதவ் அற்புதமான ஷாட்களை வெளிப்படுத்தி சதமடித்தார். 55 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் சூர்ய குமார் யாதவ். இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தனது 19வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 55 பந்துகளில் 117 ரன்களை குவித்தார். இதில் 14 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களும் அடங்கும்.  

சர்வதேச டி20 போட்டியில் சதமடித்த இந்திய வீரர்கள் 

ரோகித் ஷர்மா (4 சதங்கள்)
கே எல் ராகுல் (2 சதங்கள்) 
சுரேஷ் ரெய்னா (1 சதம்)
தீபக் ஹூடா (1 சதம்) 
சூர்யகுமார் யாதவ் (1 சதம்) 

டாப்லி 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். டி20 தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது. தொடர் நாயகன் விருதை புவனேஸ்வர் குமார் வென்றார். 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது.  இங்கிலாந்து அணிக்கு எதிராகக் கடைசியாக விளையாடிய 4 டி20 தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து: கடைசி 4 டி20 தொடர்கள் 

2017 - இந்தியாவில் நடைபெற்ற தொடரில் இந்தியா வெற்றி (2-1)
2018 - இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் இந்தியா வெற்றி (2-1)
2021 - இந்தியாவில் நடைபெற்ற தொடரில் இந்தியா வெற்றி (3-2)
2022 - இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் இந்தியா வெற்றி (2-1)

2017-லிருந்து இந்தியாவும் மே.இ. தீவுகளும் மட்டுமே டி20 தொடரில் இங்கிலாந்தைத் தோற்கடித்துள்ளன. 2017 மற்றும் இந்த வருடம் நடைபெற்ற டி20 தொடர்களில் இங்கிலாந்தை மே.இ. தீவுகள் அணி தோற்கடித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory